சாவர்க்கர் ஆங்கிலேயருக்கு ஆதரவாக செயல்படுகிறார் னு #சுபாஷ் சந்திர போஸ் சொன்னார்! #முத்துராமலிங்கத் தேவர் போசுக்கு ஆதரவாக செயல்பட #சாவர்க்கர் எதிராக செயல்படுகிறார்! #முழுவதும்_பார்க்கவும்
About :
Other Information
Categories:
Fan PageFeatured Articles:
தோழர் திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கு மீண்டும் முடக்கம்! சமூகவலைத்தளங்களில் சுருக்கப்படும் மே 17 இயக்கத்தின் ஜனநாயக வெளி! - மே பதினேழு இயக்கம்nnமே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி கொண்டிருக்கும், சுமார் 1.7 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்ட டிவிட்டர் கணக்கு, ஒன்றிய பாஜக அரசின் உத்தரவின் பேரில் கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் இந்திய பயனாளர்களின் பார்வைக்கு அனுமதி மறுக்கப்படுகிறது இதனையடுத்து மாற்று பயன்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட புதிய டிவிட்டர் கணக்கையும் டிவிட்டர் நிறுவனம் தற்போது முடக்கியுள்ளது. கருத்துரிமையை மறுக்கும் டிவிட்டர் நிறுவனத்தின் ஜனநாயக விரோத செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.nnஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்களை, திட்டங்களை அம்பலப்படுத்தும் விதமாக தோழர் திருமுருகன் காந்தி தனது டிவிட்டர் கணக்கில் தொடர்ச்சியாக பதிவிட்டு வந்தார். அமைச்சர்கள் உட்பட பலரை தனது கேள்விகள், விமர்சனங்கள் மூலம் நெருக்கடிக்குள்ளாக்கினார். இதனால் பாசிச பாஜக அரசு தோழர் திருமுகன் காந்தியின் பதிவுகளை இந்திய பயனாளர்கள் பார்வையிடுதை தடுக்க டிவிட்டர் நிறுவனத்திற்கு உத்தவிட்டது. தோழர் திருமுருகன் காந்தி மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் ஒன்றிய பாஜக அரசை நெருக்கடிக்குள்ளாக்கும் பல செயற்பாட்டாளர்களின் கணக்கு இவ்வாறு முடக்கப்பட்டது. புதிய கணக்கின் மூலம் மாற்று வழியில் மக்களை அடைவதை தடுக்கும் நோக்கில் தற்போது தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் புதிய கணக்கையும் முடக்கியுள்ளது.nnமே பதினேழு இயக்கம் இத்தகைய அடக்குமுறையை நீண்டகாலமாகவே சந்தித்து வருகிறது. மே பதினேழு இயக்கத்தின் முகநூல் கணக்கு சில ஆண்டுகளாக இவ்வாறு முடக்கப்பட்டிருந்தது. யூடியூப் தளம் முழுமையாக முடக்கப்பட்டு பல்லாண்டுகால காணொளி தரவுகளை இழந்தோம். தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் முகநூல் பக்கம், முகநூல் கணக்கு உள்ளிட்டவை தகுந்த காரணங்களின்றி நீக்கப்பட்டது. மே பதினேழு இயக்கத் தோழர்களின் செயல்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தற்போது டிவிட்டர் தளத்தில் அந்த அடக்குமுறை நிகழ்ந்து வருகிறது.nnசமூக வெளியில் கருத்துக்களை தெரிவிப்பது அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை. அதிகார வெறியில் பாசிசத்தை புகுத்த முயலும் பாஜக அரசு, அத்தகைய பேச்சுரிமையை, கருத்துரிமையை மறுக்கும் செயலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தகுந்த காரணங்கள் அளிக்காமல் பல முக்கிய நபர்களின் கணக்குகளை முடக்க ஒன்றிய பாஜக அரசு தொடர்ச்சியாக கோரி வருவதற்கு எதிராக டிவிட்டர் நிறுவனம் சமீபத்தில் நீதிமன்றம் சென்றுள்ளது. இதன் மூலம் ஒன்றிய பாஜக அரசு ஜனநாயக விரோதமாக செயல்படுவது அம்பலமாகியுள்ளது. ஆயினும் ஒன்றிய பாஜக அரசு அப்போக்கை நிறுத்திவிடவில்லை என்பதை தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் டிவிட்டர் கணக்கு முடக்கம் காட்டுகிறது.nnதோழர் திருமுருகன் காந்தி அவர்களின் சமூக வலைத்தள செயல்பாடுகளை முடக்கினால் மே பதினேழு இயக்கத்தின் கருத்துக்கள் மக்களை சென்றடைவதை தடுத்துவிடலாம் என்று ஒன்றிய அரசு எண்ணுகிறது. ஜனநாயக வெளியை சுருக்கும் ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் மே பதினேழு இயக்கத்தின் செயல்பாடுகளை முடக்கிவிட முடியாது என்பதை உறுதிபட கூறுகிறோம். அடக்குமுறைகள் அதிகரித்தால் அதே வீரியத்துடன் மீண்டெழுவோம். ஒன்றிய பாஜக இத்தகைய ஜனநாயக விரோத செயல்களை உடனடியாக நிறுத்துமாறு மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.nnமே பதினேழு இயக்கம்n9884864010
பழங்குடிகளின் இந்திய விடுதலைப்போரை அபகரித்த பார்ப்பன-மார்வாடிகள் n - இந்தியாவின் 75ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் சிறப்புத் தலையங்கம்nnசுபாஸ் சந்திரபோஸும் காங்கிரஸிலிருந்து சூழ்ச்சிகரமாக வெளியேற்றப்பட்டார். அவர் பர்மா, மலேசியா, சிங்கப்பூரில் திரட்டிய படைக்கு எதிராக இந்துமகா சபை ஆங்கிலேயருக்காக படைதிரட்ட ஆரம்பித்தது. இப்பணியை முன்னின்று நடத்தியவர் சாவர்க்கர். இவரால் திரட்டப்படையைக் கொண்டே சுபாஸ் சந்திரபோசின் படையை ஆங்கிலேயர் தடுத்து நிறுத்தினர். இதே சமயம் பஞ்சத்தில் பல கோடி பேர் பலியான வங்கம், அஸ்ஸாமில் ஆர்.எஸ்.எஸ் ஆங்கில அரசிற்காக போர் வரியை வசூலித்தது. இப்படியாக ஆங்கிலேய அரசுடன் கைகோர்த்து செயல்பட்ட பார்ப்பன-பனியா கும்பல், இந்திய துணைக்கண்டத்தின் விடுதலைக்காக போராடிய பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, இசுலாமிய மக்களை அரசியல் அதிகாரத்தில் பங்கேற்க விடாமல் தடுத்தது.nnகட்டுரையை வாசிக்கnhttps://may17kural.com/wp/brahmins-marwadis-who-usurped-the-indian-liberation-war-ofthe-tribes/nnமே 17 இயக்கக் குரல்n9444327010
நிதிஷ்குமாரின் சந்தர்ப்பவாதமும், பாஜகவின் அதிகாரவெறியும்n - மே 17 இயக்கக் குரல் தலையங்கம்nn2024 பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் 2025-ல் வர இருக்கும் பீகாரின் தேர்தலை மையமாகக் கொண்டு இக்கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது எனலாம். ஏனெனில் 43 உறுப்பினர்களை வைத்திருக்கும் திரு.நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதாதளத்தின் 80 உறுப்பினர்களை வைத்திருக்கும் திரு.தேஜஸ்வியை துணை முதலமைச்சராக்குகிறார் எனில், 2024 தேர்தலில் தனது கடந்த கால பிரதமர் பதவிக்கான கனவினை கைவிடவில்லை என்பதையும் நாம் கவனிக்கலாம். இது போன்ற சந்தர்ப்பவாத அரசியல் சூழல் எவ்வகையிலும் பாஜகவை தனிமைப்படுத்தவோ, கோட்பாடுரீதியாக தோற்கடித்து அரசியல் மாற்றத்தையோ இந்தியத் துணைக்கண்டத்தில் கொண்டு வராது.nnவாசிக்கnhttps://may17kural.com/wp/opportunism-of-nitish-kumar-and-authoritarianism-of-bjp/nnமே 17 இயக்கக் குரல்n9884864010
தோழர் சா காந்திnஅவர்களின்nமின்சார அமன்மென்ட் பில் பற்றியான நேர்காணல்nn
தி கிரே மேன் படமும் மெர்சினரிகளும்n - மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரைnnவிக்ரம் திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசிலும், க்ரேமேன் திரைப்படத்தில் தனுஷும் ஏற்று நடித்திருக்கிற கதாபாத்திரங்கள் கட்டற்று செயல்படுகின்றன; அதிகார மீறல்களை செய்கின்றன; கணக்கீடு இல்லாமல் ஆயுதங்களை பயன்படுத்துகின்றன. அநாமதேயமாக (Anonymous) தங்களை வைத்துக் கொள்கின்றன. ஆனால் இவை அனைத்தும் வில்லன் கதாபாத்திரமாக இருந்து செய்யாமல் கதாநாயகத்தனத்தோடு செய்யப்படுகிறது.nnகட்டுரை வாசிக்கnhttps://may17kural.com/wp/the-gray-man-movie-and-the-state-sponsored-mercenaries/nnமே 17 இயக்கக் குரல்n9884864010
தீரன் சின்னமலை: ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்த விடுதலை வீரன்n - மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரைnn1801ம் ஆண்டு, பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானியில் உள்ள காவிரிக்கரையில் எதிர்த்த தீரன் சின்னமலை வெற்றிப் பெற்றார். அந்த வெற்றியைத் தொடர்ந்தாற்போல், 1802-ல் சிவன் மலைக்கும் சென்னிமலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கினார். தீரன் சின்னமலை அவர்கள் பிடிபடாமலிருக்க கொரில்லாப் போர் முறைகளைக் கையாண்டார். 1803ல் அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி தரைமட்டமாக்கினார்.nnகட்டுரையை வாசிக்கnhttps://may17kural.com/wp/dheeran-chinnamalai-the-hero-fought-against-british-imperialism/nnமே 17 இயக்கக் குரல்n9884864010
அபகரிக்கப்படும் 'அறிவு'n - மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரைnnஇந்திய பார்ப்பனிய அரசாங்கத்தின் பாசிச போக்கால் மிகவும் நெருக்கடியான சூழலிலேயே அரசியல் பொறுப்புள்ள கலைஞர்கள் வேலை செய்து வருகின்றனர். இத்தகைய சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று பேசும் கலைஞர்களை இங்குள்ள இயக்கங்கள் பாதுகாத்து, மக்கள் அவர்களுடன் பக்கபலமாக நின்றால்தான் சனாதன கட்டமைப்பை உடைத்தெறிய முடியும்.nnகட்டுரையை வாசிக்கnhttps://may17kural.com/wp/intellectual-property-theft-from-therukural-arivu/nnமே 17 இயக்கக் குரல்n9884864010
#GoBackModi